ரமலான் நோன்பு தொடக்கம் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் இயக்கம் எச்சரிக்கை

ரமலான் நோன்பு மாதம் தொடங்கவுள்ள நிலையில் பொது மக்கள் மற்றும் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என தனது இயக்கத்தினருக்கு ஐ.எஸ் அமைப்பு வீடியோ மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2017-05-27 06:48 GMT
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் கடந்த திங்களன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தற்போது ஐ.எஸ் இயக்கம் தனது இயக்கத்தினருக்கு பயங்கர தகவல் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், உங்கள் வேலையை வெறுக்காதீர்கள். இஸ்லாமிய நாடுகளுக்கு போக முடியாத ஐரோப்பியாவில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள், மக்கள் இருக்கும் வீடுகளில், சாலையில், மார்கெட்களில் அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அப்பாவிகள் என கூறப்படும் மக்கள் மீது நீங்கள் நடத்த போகும் தாக்குதல் மிக பயனுள்ளதாக இருக்கும் எனவும் இது ரமலான் வெகுமதியாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பாதுகாப்பு துறை, கடந்த திங்களன்று நடந்த தாக்குதல் போலவே மீண்டும் இன்னொரு தாக்குதல் அதே நபர்களின் ஆட்களால் நடத்தபடலாம் என கூறியுள்ள நிலையில் ஐ.எஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்