இந்திய நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப பணி வழங்கியதால் முடங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு பணிகளை இந்திய நிறுவனத்திற்கு அளித்ததே விமான சேவை பாதிப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2017-05-30 06:07 GMT
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப கணினி கட்டமைப்பு பழுதானதால் ஏற்பட்ட பெரும் பாதிப்பு காரணமாக அதன் உலகளாவிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

மூன்றாவது நாளான இன்று படிப்படியாக விமான சேவைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப வலையமைப்பில் மின்விநியோகம் தடைபட்டதால் ஹீத்ரூ மற்றும் காட்விக் விமான நிலையங்களில் அதன் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.

அதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். கணினி வலையமைப்பு பணிகளை சென்ற ஆண்டு இந்தியாவின் டாடா நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என ஜிஎம்பி தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி அலெக்ஸ் குரூஸ் இந்த குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்துள்ளார்.

குறித்த விமான சேவை பாதிப்பு காரணமாக 150 மில்லியன் பவுண்ட்டை பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு திருப்பி செலுத்தும் நிலைக்கு பிரிட்டிஷ் ஏற்வேஸ் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்