பிரான்சில் கார் மோதியதில் 3 சீன மாணவர்கள் காயம்

பிரான்சின் தெற்கே பள்ளி கூடம் ஒன்றின் வெளியே கார் மோதியதில் 3 சீன மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Update: 2017-11-11 01:35 GMT
தவுலோஸ்,

பிரான்சின் தெற்கே தவுலோஸ் நகரில் பள்ளி கூடம் ஒன்றின் அருகே சிலர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை நோக்கி கார் ஒன்று வந்து மோதியது. இந்த சம்பவத்தில் 3 சீன மாணவர்கள் காயமடைந்தனர்.

காரை ஓட்டி வந்த 28 வயது வாலிபர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர். ஆனால் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. சம்பவ இடத்திலேயே போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்தவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவார். அவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்டுநர் நீண்ட நாட்களாக மனநல பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்தவர் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்