பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டின் அருகே மர்ம நபர்களால் சுட்டு கொலை

பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ம நபர்களால் வீட்டின் அருகே சுட்டு கொல்லப்பட்டார்.

Update: 2018-12-26 11:15 GMT
கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் முத்தஹிடா குவாமி இயக்கத்தினை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ரசா அபிதி (வயது 46).  தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியான இவர் தனது வீட்டின் அருகே காரில் வந்தபொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.  அவரது இறுதி சடங்குகள் இன்று நடந்தன.

இந்த சம்பவத்தின்பொழுது அவரது காவலர் உடனடியாக பதிலுக்கு சுடாமல் வீட்டுக்குள் சென்று மர்ம நபர்களை சுடுவதற்கு அபிதியின் தந்தையிடம் ஆயுதம் ஒன்றை தரும்படி கேட்டு உள்ளார்.  இதனை தொடர்ந்து அவரது காவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் கராச்சி நகரின் என்.ஏ.-251 தொகுதியில் இருந்து அபிதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்