உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி

இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது.

Update: 2019-01-14 23:30 GMT

லண்டன், 

92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017–ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

அதன் பின்னர் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது 25 மில்லியன் யூரோ செலவில் ஆகாய கப்பல் புனரமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏர்லேண்டர் ஆகாய கப்பல் நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இதையடுத்து ஆகாய கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்