இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்

இங்கிலாந்தில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்.;

Update:2019-05-13 04:00 IST
லண்டன்,

இங்கிலாந்தின் இந்த ஆண்டின் முதல் ஆயிரம் பெரும் பணக்காரர்கள் கொண்ட பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ளது. அதில், முதல் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்துள்ளனர். ஸ்ரீ இந்துஜா, கோபிசந்த் இந்துஜா என்ற இந்துஜா சகோதரர்கள், முதலிடத்தில் உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ஆகும். இந்த குடும்பம் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

கடந்த ஆண்டு நல்ல லாபம் கிடைத்ததால், முதலிடத்தை பிடித்துள்ளனர். சொத்துகள், கம்பெனி பங்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கில் உள்ள பணம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

மும்பையில் பிறந்த ரூபன் சகோதரர்கள் ரூ.96 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அதே சமயத்தில் மற்றொரு இந்தியரான லட்சுமி மிட்டல், கடந்த ஆண்டு நஷ்டத்தை சந்தித்ததால், 5-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்