உலகைச்சுற்றி...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான வாலிபர் பலியானார்.

Update: 2019-06-24 22:29 GMT

* ஈரானுடன் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்து பேசிய அவர் ஈரான் விவகாரத்தில் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி ஆதரவு கோரினார்.

* ரஷியாவின் செச்சினியா பிராந்தியத்தின் தலைநகர் குரோசினியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 போலீஸ் அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தினார். இதையடுத்து அருகில் இருந்த சக போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தின் தலைநகர் அபாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் சிரியாவை சேர்ந்த ஒருவர் பலியானார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதே நகரில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்