இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-09-22 01:11 GMT
ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இன்று அதிகாலை 2.53 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

இதுபற்றி வானிலை மற்றும் புவி இயற்பியல் ஆய்வு மைய அதிகாரி முகமது படிலா கூறும்பொழுது, மலுகு தெங்கரா பராத் மாவட்டத்தில் இருந்து 165 கி.மீ. தொலைவில் கடற்படுகைக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை.  அதனால் சுனாமி எச்சரிக்கையை நாங்கள் பிறப்பிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்