உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 21 லட்சத்து 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 21 லட்சத்து 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

Update: 2020-05-23 11:57 GMT
ஜெனீவா,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 21 லட்சத்து 71 ஆயிரத்து 626 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 4,03,228
ரஷியா - 1,07,936
பிரேசில் - 1,35,430
ஸ்பெயின் - 1,96,958
இத்தாலி - 1,36,720
பிரான்ஸ் - 64,209
ஜெர்மனி - 1,59,900
துருக்கி - 1,16,111
ஈரான் - 1,02,276
இந்தியா - 51,783
பெரு - 44, 848
சீனா - 78,258
கனடா - 42,594
மெக்சிகோ - 42,725

மேலும் செய்திகள்