உலகைச் சுற்றி...

ஜப்பான் விஞ்ஞானி தாகேஷி நிஷிமுரா உள்ளிட்டவர்களை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கு ‘இக் நோபல்’ ஒலியியல் பரிசு கிடைத்துள்ளது.

Update: 2020-09-18 22:15 GMT
* ஆப்கானிஸ்தானில் பலவிதமான இலக்குகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றன என காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டிருப்பதாக அது தெரிவித்து இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஜெர்மனியில் கடந்த ஆண்டு தாக்குதலுக்கு ஆளான யூத மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிற இடங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசு 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ.195 கோடி) நிதி வழங்குகிறது.

* பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பயங்கரவாதியும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் (ஆப்கானிஸ்தான்) தளபதியுமான காரி ஆசாம், போதைப்பொருள் கடத்தல் குழுவிற்குள் ஏற்பட்ட உள்போட்டி மோதலில் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* வடகொரியாவில் சிறிய எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் உள்ளன என்று அமெரிக்க கூட்டுப்படைகளின் துணைத்தலைவர் ஜான் ஹைடன் கூறி உள்ளார்.

* தென்கொரியாவில் ஒரு தனியார் பள்ளி அறக்கட்டளையுடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் நீதித்துறை மந்திரி சோ குக்கின் சகோதரர் சோ குவானுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

*ஒரு முதலை ஹீலியம் செறிவூட்டப்பட்ட காற்றை சுவாசித்தபின்னர், அதன் சுருதி உயர்வதை காட்டியதற்காக ஜப்பான் விஞ்ஞானி தாகேஷி நிஷிமுரா உள்ளிட்டவர்களை கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கு ‘இக் நோபல்’ ஒலியியல் பரிசு கிடைத்துள்ளது.

* பெத்லஹேமில் இஸ்ரேல் படைகள் பாலஸ்தீன இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்தன. நேற்று முன்தினம் மேற்கு கரையில் 22 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்