குரோசியாவில் பிரதமர் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி; தனிமைப்படுத்தி கொண்ட பிரதமர்

குரோசியா நாட்டு பிரதமர் தனது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Update: 2020-11-29 04:58 GMT
ஜாக்ரெப்,

குரோசியா நாட்டின் பிரதமராக ஆண்டிரெஜ் பிளென்கோவிக் இருந்து வருகிறார்.  உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு அந்நாட்டில் 1,655 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று குரோசியா நாட்டில் 1 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், அரசு செய்தி தொடர்பாளர் மார்கோ மிலிக் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், லேசான காய்ச்சலால் அவதிப்பட்ட பிரதமர் பிளென்கோவிக்கின் மனைவி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன் தொடர்ச்சியாக பிரதமரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  இதன் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

இதனால், பிரதமர் பிளென்கோ 10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்