ஸ்பெயினில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 29.13 லட்சத்தைக் கடந்துள்ளது.

Update: 2021-02-04 00:57 GMT
கோப்புப்படம்
மாட்ரிட்,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.48 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 22.76 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயினில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ஸ்பெயின் 7-வது இடத்தில் உள்ளது.
 
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் அதிகபட்ச அளவாக 31,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்பெயினில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 29,13,389 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 565 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்