சிறிய காதுகள், வெட்டப்பட்ட உதடுகள்,மூக்கு, என வேற்றுகிரகவாசியாக உருமாறி வரும் வாலிபர்

தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ள இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

Update: 2021-03-18 05:35 GMT
லண்டன்

இங்கிலாந்தை சேர்ந்தவர்  அந்தோணி லோஃப்ரெடோ ( வயது 32) . இவர் தன்னை ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் வேற்றுகிரகவாசிகள் போன்று  முழுவதுமாக உருமாற்றிக்கொண்டுள்ளார்.   பார்ப்பதற்கே விசித்திரமாக, அறுக்கப்பட்ட சிறிய காதுகள், மூக்கு, வெட்டப்பட்ட உதடுகள் மற்றும் இரண்டாக பிளக்கப்பட்ட நாக்குடன் பயங்கரமாக தோற்றமளிக்கும் ஒவர் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் கருப்பு வேற்றுகிரகவாசி
பெயருக்கு ஏற்ப கண்கள் உள்பட அவரது உடல் முழுவதிலும் டாட்டூ வரைந்துகொண்டு கருப்பாக மாறியுள்ளார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தன்னை உருமாற்றும் பணியில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். அதற்கு அவர் வைத்த பெயர் கருப்பு வேற்றுகிரகவாசி திட்டம் ஒவ்வொரு முறை சிறு சிறு மாற்றங்களை செய்துவந்த அந்தோணி  அதுகுறித்த  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவந்துள்ளார். இதனால் அவருக்கு 345,000 பாலோவர்ஸ் குவிந்துள்ளனர்.

அறுபட்ட மூக்கு மற்றும் இரண்டாக பிளவுபட்ட நாக்குடன் தன்னால் இயல்பாக முன்பு இருந்ததை போல பேச முடியவில்லை என்றாலும், தனது புதிய தோற்றத்துக்காக பெருமைப்படுவதாக கூறுகிறார். இது தனது நீண்டநாள் ஆசை என்று அவர் கூறுகிறார்.

மேலும் செய்திகள்