கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 91 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 91 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதார அமைச்சகம் தகவல்.

Update: 2021-04-16 10:21 GMT

அபுதாபி,

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியானது முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை இந்த தடுப்பூசியானது 93 லட்சத்து 87 ஆயிரத்து 344 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது 100-க்கு 94.91 பேர் என்ற சதவீதத்தில் இருந்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்