பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-01-28 04:27 GMT
கோப்புப்படம்
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாகாணமாக பலுகிஸ்தான்  உள்ளது. இந்த மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடியில் வழக்கமான பாதுகாப்பு பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டுவந்தனர். 

அப்போது அங்கு வந்த பங்கரவாதிகள் பாதுப்பு படை வீரர்களை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு படையினர், சுதாதரித்து கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நடந்த சண்டையில் பாதுகாப்பு பணியில் இருந்த 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவ ஜெனரல் பஜ்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கெச் மாவட்டத்தின் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்களின் தரப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  பல வீரர்கள் படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகளின் தரப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் உயிருடன் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம். உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்