ஓடுபாதையில் நிலை தடுமாறி மீண்டும் மேலெழுந்த பயணிகள் விமானம்..! பதற வைக்கும் காட்சிகள்

வேகமாக வீசிய புயல் காரணமக ஓடுபாதையில் நிலை தடுமாறி மீண்டும் விமானம் மீண்டும்மேலெழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-02-02 10:26 GMT
லண்டன், 

வட ஐரோப்பாவில் வீசிவரும் புயல் காரணமாக மணிக்கு 145 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசுகிறது. 

இந்த சூழலில் ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, பலத்த புயல் காற்றின் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விபத்தைத் தவிர்ப்பதற்காக விமானம் தரையிறங்க முயற்சித்து, மீண்டும் மேலெழுந்த பயணிக்க தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. 

இதுதொடர்பாக டுவிட்டரில் பகிரப்பட்ட வீடியோ காட்சியில், “A321 பிரிட்டிஷ் ஏர்வே விமானம் முதலில் ஓடுபாதையைத் தொட முயற்சிப்பதைக் காட்டியது. பின் விமான டயர்களின் ஒரு பகுதி மட்டும் ரன்வேயை தொட்டது. விமானத்தை சரியாக தரை இறக்க முடியாததால் விமானி சாமர்த்தியமாக விமானத்தை அப்படியே மீண்டும் டேக் ஆப் செய்தார். இதில் விமானத்தின் பின்பகுதி லேசாக ரன்வேயில் உரசியதால் புகை எழுந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் விமானி வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கினார்” என்று அதில் இடம்பெற்றிருந்தது.




மேலும் செய்திகள்