தைவானை சுற்றி போர்ப்பயிற்சி நிறைவடைந்ததும்... சீனா வெளியிட்ட புது வருட செய்தி

தைவான் தேசிய பாதுகாப்பு மந்திரி வெல்லிங்டன் கூ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.;

Update:2026-01-01 06:34 IST

பீஜிங்,

ஆசிய நாடான சீனா, தைவானை தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கூறி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சுயாட்சி பகுதியாக தன்னை அறிவித்து கொண்ட தைவான், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தைவானின் வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சுற்றி சீனாவின் ராணுவம், கடற்படை, விமான படை மற்றும் ராக்கெட் படையினரையும் கொண்டு கூட்டாக போர்ப்பயிற்சியை தொடங்கியது.

அதற்கு ஜஸ்டிஸ் மிஷன் 2025 என பெயரிடப்பட்டது. இதற்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்தது. சீனாவின் செயல்கள் மண்டல ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. உலக நாடுகளும் இதனை உற்றுநோக்கி வருகின்றன.

எனினும், போர்ப்பயிற்சியை சீனா தொடர்ந்து மேற்கொண்டது. இந்த பயிற்சி நேற்று நிறைவடைந்தது. போர்ப்பயிற்சி நிறைவு, புது வருட பிறப்பு ஆகியவற்றை முன்னிட்டு, சீன அதிபர் ஜின்பிங் நேற்று இரவு வெளியிட்ட செய்தியில், நம்முடைய அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணியானது, தடுத்து நிறுத்த முடியாத விசயம் ஆகும் என குறிப்பிட்டார்.

ஒரே நாடு, 2 அமைப்புகள் என்ற கொள்கையை நாம் அமல்படுத்தியே ஆக வேண்டும். ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவற்றை நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக ஒன்றிணைக்க ஆதரவு அளிக்க வேண்டும். அவற்றுடன் நீண்ட கால வளம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என கூறினார்.

எனினும், தைவான் தேசிய பாதுகாப்பு மந்திரி வெல்லிங்டன் கூ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்