வருகிற 4-ந் தேதி சீனா செல்லும் பாகிஸ்தான் துணை பிரதமர்
7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை சீன தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது.;
கோப்புப்படம்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான்-சீனா வெளியுறவு அமைச்சர்களின் 7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை சீன தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் சீனாவுக்கு வருகை தருகிறார் சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி அழைப்பின் பேரில், இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது, 2026 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இரு வெளியுறவு அமைச்சர்களும் தொடர்ச்சியான முன்முயற்சிகள் மற்றும் நினைவு நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளனர்.