மத்திய மந்திரியுடன் ரோமானிய மேயர் வாக்குவாதம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

மேயருக்கு அவர் நறுக்கென்று பதிலடி கொடுக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Update: 2022-03-05 09:55 GMT
ரோமானியா,

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து சென்று அங்கிருந்து விமானம் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு முழுவீச்சில் செய்து வருகிறது. இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக மத்திய மந்திரிகள்  அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். 

அந்த வகையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இப்போது ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் உள்ளார்.

இந்நிலையில் அவருக்கும் ரோமானிய மேயருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேயருக்கு அவர் நறுக்கென்று பதிலடி கொடுக்கும் வீடியோ இது.

ரோமானிய தலைநகர் புச்சாரெஸ்ட் நகரத்தில் மாணவர்கள் தஞ்சமடைந்து இருக்கும் முகாம்களில் அவர் சென்று பார்த்து, அவர் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.அப்போது ரோமானிய மேயர் குறுக்கிட்டு அவருடைய பேச்சை நிறுத்தினார்.

மேயர் குறுக்கிட்டு பேசியதாவது, “மாணவர்களிடம் நான் அவர்களுக்கு செய்த உதவிகளை எடுத்துக்கூறுங்கள். அவர்களுக்கு நான் தான் உணவு அளித்தேன், தங்குமிடம் கொடுத்தேன்,மேலும் பல உதவிகளை செய்தேன். இவற்றை செய்தது நான் தான் என்று சொல்லுங்கள். நீங்கள் செய்யவில்லை என்பதையும் சொல்லுங்கள்” என்று சற்று காட்டமாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மந்திரி, அவரிடம் தள்ளி நிற்க சொன்னார். பின், “என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும், அதை நீங்கள் எனக்கு கூற தேவையில்லை” என்றார்.

அதன்பின் அவர் மாணவர்களிடம், ரோமானிய அரசு இந்தியரக்ளுக்காக செய்த உதவிகளை குறிப்பிட்டு பேசினார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்