ஐ.நா. பொதுச்செயலாளருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு

ஐ.நா. பொதுச்செயலாளரை இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்க்லா நேரில் சந்தித்து பேசினார்.;

Update:2022-03-24 15:30 IST
வாஷிங்டன்,

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்க்லா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்