இந்தோனேசியா: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 16 பேர் பலி
தீ விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.;
ஜகார்தா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுலாவாசி மாகாணம் மனடொ பகுதியில் முதியோர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.