மெக்சிகோவில் ரெயில் தடம்புரண்டு விபத்து - 13 பேர் உயிரிழப்பு

காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-12-29 10:25 IST

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் ஒக்சாகா மற்றும் வெராகுரூஸ் மாகாணங்களுக்கு இடையே இண்டர்ஓஷெனிக் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பசிபிக் பெருங்கடலுடன் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கிறது. இந்த ரெயிலை கடந்த 2023-ம் ஆண்டு மெக்சிகோ முன்னாள் ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் திறந்து வைத்தார்.

இந்த இண்டர்ஓஷெனிக் ரெயில் நிசாண்டா நகரத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு உதவ கடற்படைச் செயலாளரும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர் என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷென்பாம் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்