ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி?
91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்படுகிறது.;
கோப்புப்படம்
மாஸ்கோ,
ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏறபடவில்லை என்றும் இந்த சம்பவத்தால் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் வீடு மீது டிரோன் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியது பொய் என்றும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.