ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

நேற்று முன்தினம் பைசாபாத் அருகே அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

Update: 2024-01-04 01:15 GMT

தஜிகிஸ்தான், 

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் நேற்று முன்தினம் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்