லைவ் அப்டேட்ஸ்: டான்பாஸ், கார்கிவ் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை கொண்டுள்ள டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலுமாய் கைப்பற்றுவதில் ரஷியா முனைப்பு காட்டி வருகிறது.

Update: 2022-05-29 19:00 GMT


Live Updates
2022-05-30 15:53 GMT

மாஸ்கோ,

ரஷியாவில், 40 வயதிற்கு மேற்பட்டோரையும் ராணுவத்தில் சேர அனுமதிக்கும் அரசாணைக்கு அந்நாட்டு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய வீரர்கள் 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதுவரை 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உச்சக்கட்ட வயது வரம்பு அகற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், தகவல் தொடர்பு நிபுணர்கள் என ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்களை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அரசு திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் போரில் ரஷிய வீரர்கள் 30,000 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  

2022-05-30 12:38 GMT

உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா நிறுத்தவில்லைஎன்று உக்ரைனின் ஆயுதப் படைகள் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கில் உள்ள கார்கிவ் பகுதியில், நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ரஷியா வான்வழித் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

2022-05-30 12:36 GMT

உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல்களைத் தாக்கும் ஹார்ப்பூன் ஏவுகணைகள் வந்துள்ளன. அமெரிக்காவில் இருந்தும் ஹோவிட்சர் ஏவுதல் ஆயுதங்கள் கிடைத்துள்ள. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிரான போரில் இது உக்ரைனுக்கு பலம் தருவதாக இருக்கும் என்று உக்ரைன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்சி ரெஸ்நிக்கோவ் தெரிவித்துள்ளார்.

ஹார்ப்பூன் ஏவுகணைகள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் பயிற்சி பெற்ற உக்ரைன் வீரர்களால் அவை பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ரஷியாவின் ஒட்டுமொத்த கடற்படை கப்பல்களையும் மூழ்கடிக்கும் விதமாக அத்தனை ஏவுகணைகள் கிடைத்துள்ளன என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022-05-30 06:23 GMT

ரஷிய தாக்குதலில் லுகன்ஸ் மாகாணத்தின் சிவ்ரொடொனெட்ஸ் நகரில் உள்ள 90 சதவீத கட்டிடங்கள் சேதம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

2022-05-30 00:24 GMT

ரஷிய அதிபர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இருவரும் நேற்று முன்தினம் 80 நிமிடம் தொலைபேசியில் பேசினார்கள். அப்போது அவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அத்துடன் மரியுபோல் அஜோவ் உருக்காலையை காத்து, பின்னர் சரண் அடைந்ததாக கூறப்படுகிற 2,500 வீரர்களை ரஷியா விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் புதினை கேட்டுக்கொண்டார்கள். உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுக முற்றுகையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் புதினை வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-05-29 19:01 GMT

டான்பாஸ் பிராந்தியத்திலும், கார்கிவின் சில பகுதிகளிலும் வர்ணிக்க முடியாத அளவுக்கு நிலைமை கடினமானதாக உள்ளதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் உக்ரைனில் தனது நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்று தான் நம்பவில்லை என்று இங்கிலாந்துக்கான ரஷிய தூதர் ஆண்ட்ரெய் கெலின் தெரிவித்துள்ளார். உக்ரைனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், புச்சாவில் போர்க்குற்றங்கள் அரங்கேறின என்பதை அவர் மறுத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி போருக்கு பின்னர் முதல் முறையாக தலைநகர் கீவை விட்டு வெளியேறி கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படைகளின் நிலைகளை பார்வையிட்டார். அப்போது படை வீரர்களின் சேவையை அவர் மனதார பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்