பயனர்களிடம் நன்கொடை கோரும் விக்கிப்பீடியா... பணம் செலுத்த ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம்..!!

விக்கிபீடியாவிற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.;

Update:2022-06-23 16:52 IST

Image Courtesy : AFP 

வாஷிங்டன்,

தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகிறது விக்கிப்பீடியா நிறுவனம். சமீப காலங்களாக தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா பயனர்களிடம் நன்கொடை கோரி வருகிறது.

இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது. இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

"எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக நாங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா அறக்கட்டளையை ஆதரித்து வருவதாக " கூகுள் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கூகுள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள தொகை பற்றிய விவரம் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்