திபெத்தில் ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம்

ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-25 20:13 IST

லாசா,

திபெத்தில் இன்று ஒரே நாளில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நள்ளிரவு 12.04 மணிக்கு தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதியம் 1.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமும் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்