பெத்லகேமில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பெத்ல கேமின் ஒளிதான் உலகின் ஒளி என்று கத்தோலிக்கத் தலைவர் கார்டினல் பியர்பட்டிஸ்டா பிசா பல்லா கூறினார்.;

Update:2025-12-25 21:16 IST

காசா,

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே இஸ்ரேல்-காசா போர் காரணமாக பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இயேசு பிறந்த பெத்லகேமில் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக மேஞ்சர் சதுக்கத்தில் இடிபாடுகளுக்கும் முள்வேலிகளுக்கும் மத்தியில் குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காசாவில் போர் போர் நிறுத்தம், ஏற்பட்டதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. இதில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் மீண்டும் நிறுவப்பட்டது.

உயர்மட்ட கத்தோலிக்கத் தலைவரான கார்டினல் பியர்பட்டிஸ்டா பிசா பல்லா, ஜெருசலேமில் இருந்து பெத்லகேமுக்குச் செல்லும் பாரம்பரிய ஊர்வலத்தின் போது கிறிஸ்துமஸ் கொண்டா ட்டங்களைத் தொடங்கி வைத்து, ஒளி நிறைந்த கிறிஸ்துமஸ் அமைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக, ஒளியாக இருக்க முடிவு செய்வோம், பெத்ல கேமின் ஒளிதான் உலகின் ஒளி என்று கூறினார். இந்த கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்