3 இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இதுவரை இரு தரப்பிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போரில் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2023-10-31 05:41 GMT

காசா,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் தொடுத்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரு தரப்பிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போரில் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஹமாசால் பிடிக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார். இந்தநிலையில், மேலும் 3 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தனர். அவர் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நலமுடன் உள்ளார் என இஸ்ரேல் உளவு நிறுவனம் ஷென் பெட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்