பாகிஸ்தான் நடிகரை கரம்பிடித்த இம்ரான் கானின் முன்னாள் மனைவி

சியாட்டில் நகரில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக ரெஹம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.;

Update:2022-12-23 16:16 IST

Image Courtesy : @RehamKhan1 twitter

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2014-ம் ஆண்டு ரெஹம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 10 மாதம் மட்டுமே நீடித்த நிலையில், 2015-ம் ஆண்டு இம்ரான் கானும், ரெஹம் கானும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் 49 வயதாகும் ரெஹம் கான், தற்போது மிர்ஸா பிலால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகரான மிர்ஸா பிலால், அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களது திருமணம் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் எளிமையான முறையில் நடைபெற்றதாக ரெஹம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்