செவ்வாய் கிரகத்தில் உப்பு கலந்த நீர்-தாங்கும் கனிமங்கள் - சீனாவின் ஆய்வில் தகவல்

சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்ட முடிவுகளில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-09-21 16:18 GMT

பெய்ஜிங்,

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சீனாவின் விண்வெளித்துறை டியான்வென்-1 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலத்தின் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி தனது சுற்றுவட்டப் பாதையில் 780 நாட்களுக்கும் அதிகமாக பயணித்துள்ளது.

அதே போல் இந்த விண்கலத்தின் 'ரோவர்' செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுமார் 1,921 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,480 ஜி.பி. அளவிலான தரவுகளை இந்த விண்கலம் சேமித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் நீர் தாங்கும் கனிம பாறைகள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இப்பாறைகள் நீர் சார்ந்த செயல்பாடுகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் என கருதப்படுகிறது. சீன அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இந்த பாறைகள் பிரகாசமாக காட்சியளிப்பதாகவும், இவை உப்பு கலந்து நீர்-தாங்கும் கனிமங்கள் வகையைச் சேர்ந்தவை என்றும் தெரிவித்துள்ளனர்.

அது நீராக இருக்கும் பட்சத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்