இஸ்ரேலுக்கு ஆதரவு; வெள்ளை, நீல விளக்கொளியில் ஜொலித்த இங்கிலாந்து நாடாளுமன்றம்

இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து நாடாளுமன்றம் இரவில் நீலம் மற்றும் வெள்ளை நிற விளக்கொளியில் ஜொலித்தது.;

Update:2023-10-11 05:54 IST

லண்டன்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து நாடாளுமன்றம் இரவில் நீலம் மற்றும் வெள்ளை நிற விளக்கொளியில் ஜொலித்தது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தேவைப்பட்டால் ராணுவ உதவியையும் வழங்க தயார் என கூறினார்.

ஹமாஸ் அமைப்பினர் சுதந்திர போராட்ட வீரர்கள் அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் நபர்கள் இந்த தாக்குதலுக்கு முழு பொறுப்பாவார்கள் என அவர் கடுமையாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்