தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் - 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றம்

கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்தில் மதபோதகர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

Update: 2024-02-25 00:32 GMT

பாரிஸ்,

துனிசியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் மஜுப் மஜுபி (வயது 52). துனிசியாவை சேர்ந்த இவர் 1980ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே, பிரான்ஸ் தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்டு மதபோதகர் மஜுப் மஜுபி பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், பிரான்சின் நெறிமுறைகளை எதிர்க்க இஸ்லாம் ஊக்குவிப்பதாகவும், பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும், யூத சமூகத்தினரை எதிரிகளாக சித்தரித்தும் மஜுப் பேசும் வெறுப்புப்பேச்சு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், பிரான்ஸ் தேசியக்கொடியை சாத்தான் என விமர்சித்த மதபோதகர் மஜுப் மஜுபியை போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிலமணிநேரங்களில் மஜுபியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. பின்னர், 12 மணிநேரத்தில் மதபோதகர் மஜுப் மஜுபி துனிசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாரிசில் இருந்து விமானம் மூலம் துனிசியாவுக்கு மஜுபி நாடுகடத்தப்பட்டார். அதேவேளை, பிரான்ஸ் அரசின் நடவடிக்கையை எதிர்த்து மஜுபி அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்