ஆன்மிகத் துளிகள்

தாய்ப்பறவை தனது குஞ்சுகளுக்கு இரையைத் தேடி வந்து கொடுக்கும். ஆனால் அவை இரையை கொத்தித் தின்னக் கற்றுக்கொண்டபின் தன்னிடம் உணவிற்காக வந்தால் தாய்ப்பறவை அவற்றைக் கொத்தி விரட்டி விடும்.;

Update:2017-09-12 06:00 IST
ஆன்மிகத் துளிகள்
கடமை

தாய்ப்பறவை தனது குஞ்சுகளுக்கு இரையைத் தேடி வந்து கொடுக்கும். ஆனால் அவை இரையை கொத்தித் தின்னக் கற்றுக்கொண்டபின் தன்னிடம் உணவிற்காக வந்தால் தாய்ப்பறவை அவற்றைக் கொத்தி விரட்டி விடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவும், உடையும் சிரமமின்றிக் கிடைக்கும் வரை உங்கள் கடமையை நீங்கள் செய்தாகவேண்டும். பிள்ளைகள் சொந்த காலில் நிற்கும் திறமையைப் பெற்றபின் நீங்கள் அவர்களுடைய பாரத்தை சுமக்க வேண்டியதில்லை.

–ராமகிருஷ்ணர்.

ஞானம்

குருவின் அருட்பார்வை மூலம் சீடன் அறியாமை என்ற தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறான். அது கனவில் சிங்கத்தைக் கண்டு விழித்து கொள்ளும் யானையைப் போன்றது.

–ரமணர்

மகத்துவம்

முன்னேறிச் செல்லுங்கள். அளவற்ற சக்தி, அளவற்ற ஊக்கம், அளவற்ற தைரியம், அளவற்ற பொறுமை ஆகிய பலன்களே நம்மிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் மகத்தான பணி களைச் சாதிக்க முடியும்.

–விவேகானந்தர்.

மேலும் செய்திகள்