திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவர்

ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் கூகுள் துணைத்தலைவர் வழங்கினார்.;

Update:2025-06-26 13:07 IST

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில், உலகின் பணக்கார இந்து கோவில் ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி வந்து எழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

இக்கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்காகவும், ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காகவும், பொதுநலன் சார்ந்த நோக்கங்களுக்காகவும் பல்வேறு அறக்கட்டளைகளை அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளைகளுக்கு பல்வேறு நன்கொடையாளர்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு (எஸ்.வி.பிராணதான அறக்கட்டளை) கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதற்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் வழங்கினார்.

ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவரை தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்