புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

பூண்டி மாதா பேராலயத்தில் புனித வௌ்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update:2023-04-08 01:28 IST

திருக்காட்டுப்பள்ளி;

ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து பூண்டி மாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுகள் சிலுவை பாதை நிகழ்ச்சியாக நடைபெற்றது.தொடர்ந்து சிலுவை முத்தி செய்தல் நடைபெற்று ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து வழிபாடு நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மிகத் தந்தை அருளானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்