சிவகங்கை: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது;

Update:2022-06-14 10:19 IST

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த ஜுன் 5ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் 5-ம் நாள் திருவிழாவான திருக்கல்யாண விழாவும், 6-ம் நாள் சமணர் கழுவேற்றம் கழுவன் திருவிழாவும், 8-ம் நாள் புரவி எடுப்பு திருவிழாவும் நடைபெற்றது.

இந்நிலையில் 9-ம் நாள் திருவிழாவான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.பூரணை புஷ்கலை உடனான ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் காலை 10 மணியளவில் திருத்தேரில் எழுந்தருளினார். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிடாரி அன்னை ஆகியோர் சிறிய ரதத்தில் அருள்பாலித்தனர்.நேற்று மாலை 4 மணியளவில் சந்தி வீரன் கூடத்தில் இருந்து புறப்பட்ட நாட்டார்கள் மேளதாளத்துடன் வந்து வடத்தை பிடித்து தேர் இழுத்தனர்.

4 ரத வீதிகளிலும் ஓடிவந்த திருத்தேர் சரியாக 5.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது.இரண்டு வருடங்களாக திருவிழா நடைபெறாத காரணத்தால் இந்த வருடம் சிங்கப்பூர் . மலேசியா , அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் சிங்கம்புணரி மக்கள் இந்த வருடம் நேரிடையாக வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

நேர்த்திக்கடனுக்காக கொண்டுவரப்பட்ட தேங்காய்களை கல் மேடையில் வீசி எறிந்து உடைத்தனர்.இந்த நிகழ்வில் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் செய்திருந்தது .

Tags:    

மேலும் செய்திகள்