காளஹஸ்தி கோவில் தேரோட்டம்

காளஹஸ்தி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளான கலந்து கொண்டனர். நான்கு மாட வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

Update: 2024-03-09 13:11 GMT


ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோவில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்னதாக காளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலமாக கோவில் எதிரில் உள்ள மண்டபம் வரை கொண்டு வந்தனர்.

பின்னர் சாமி சிலைகளை தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இந்த தேர் திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காளஹஸ்தி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளான கலந்து கொண்டனர். நான்கு மாட வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள் பல்வேறு வேடம் அனிந்து நடனமாடியபடி வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்