ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

குருதட்சிணாமூர்த்தி சன்னதி எதிரில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு பூஜை நடந்தது.;

Update:2025-12-05 11:54 IST

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தினமும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி கோவில் வளாகத்தில் உள்ள துணை சன்னதிகளில் குரு தட்ணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பக்த கண்ணப்பர், அபய வெங்கடேச பெருமாள், சனீஸ்வரர், கனக துர்கையம்மன், நடராஜர், கால பைரவர் போன்ற சன்னதிகளில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.

அதன்படி நேற்று கோவில் நுழைவு வாயில் எதிரே வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்திக்கு கோவிலின் ஆஸ்தான அர்ச்சகர் கருணா குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக குருதட்சிணாமூர்த்தி சன்னதி எதிரில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்