ஒப்பிலியப்பன் கோவிலில் மூலவர் பாலாலயம்

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் மூலவர் பாலாலயம் நடந்தது.;

Update:2023-06-07 02:46 IST

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.இதையொட்டி பாலாலயம் என்ற பூர்வாங்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நம்மாழ்வார், பேயாழ்வார் ஆகியோர்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 13-வது திருத்தலமாக விளங்குவது ஒப்பிலியப்பன் கோவில் ஆகும். கடந்த 2009-ம் ஆண்டு இந்த கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.தற்ேபாது 13 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.மூலவர் உள்ள இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் திருப்பணிகள் தொடங்கியுள்ளதால் மூலவர் ஒப்பிலியப்பனை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் உற்சவர் பொன்னப்பர் மற்றும் பூமிதேவி தாயாரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்