இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

பூசம், அனுஷம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள்

Update: 2024-04-11 00:49 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 29-ந்தேதி வியாழக்கிழமை.

திதி: திருதியை திதி இரவு(6.5.3)க்கு மேல் சதுர்த்தி திதி.

நட்சத்திரம்: பரணி நட்சத்திரம் காலை (6.05)க்கு மேல் கார்த்திகை நட்சத்திரம்.

கீழ்நோக்குநாள்

சூலம்: தெற்கு

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்லநேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

பூசம், அனுஷம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். கார்த்திகை விரதம். சமயபுரம் மாரியம்மன் விருஷபை சேவை. திருப்பதி ஏழுமலையான் மலரங்கி சேவை. ரம்ஜான் பண்டிகை.

ராசிப்பலன்:

மேஷம்

சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள்.

கடகம்

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கன்னி

தகராறுகள் தானாக வந்து சோகங்கள் மாறிச்சுகங்கள் சேரும் நாள். தனவிரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சேமிப்புக் கரையும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

விருச்சிகம்

பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அயல்நாட்டு முயற்சி கைகூடும்.

மகரம்

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

கும்பம்

யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

மீனம்

சோகங்கள் மாறிச்சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். மாற்றினத்தவர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்