இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் மோதும் பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

Update: 2017-08-16 21:45 GMT

பர்மிங்காம்,

இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இது பகல்–இரவு டெஸ்ட் என்பது கவனத்துக்குரிய அம்சமாகும். மின்னொளியில் நடக்க இருப்பதால் பிரத்யேக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும்.

இதுவரை 4 பகல்–இரவு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி மின்னொளியின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் வெஸ்ட் இண்டீசுக்கு ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக பகல்–இரவு டெஸ்டில் ஆடிய அனுபவம் உண்டு.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவை 3–1 என்ற கணக்கில் புரட்டியெடுத்தது. அதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்