கிரிக்கெட்
உலக லெவன் அணியில் நேபாள வீரர்

உலக லெவன் அணியில் நேபாள வீரர் சந்தீப் லாமிச்சன்னே சேர்க்கப்பட்டுள்ளார்.
லண்டன்,

வெஸ்ட்இண்டீஸ்-உலக லெவன் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டனில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. நல நிதிக்காக நடத்தப்படும் இந்த போட்டிக்கான உலக லெவன் அணியில் இடம் பிடித்து இருந்த வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக நேபாளத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சன்னே சேர்க்கப்பட்டுள்ளார். சந்தீப் லாமிச்சன்னே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.