டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா-இலங்கை இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

Update: 2021-10-28 03:09 GMT
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் லீக் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தையும், ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருப்பதால் இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக மல்லுகட்டுகின்றன.

மேலும் செய்திகள்