விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் : தமிழக அணி தோல்வி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு -பரோடா அணிகள் மோதின;
20- வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், ராஜ்கோட் உள்பட 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு -பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி தொடக்கம் முதலே தடுமாறியது .இதனால் அந்த அணி 39 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி தொடக்கத்திலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.இதனால் 20.2 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இதனால் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.