ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது.;

Update:2025-12-20 17:50 IST

image courtesy:ICC

வெலிங்டன்,

16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் நியூசிலாந்து அணி இந்தியா, வங்காளதேசம் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் வருகிற 18-ம் தேதி மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் ஜோன்ஸ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம்:

டாம் ஜோன்ஸ் (கேப்டன்), மார்கோ ஆல்ப், ஹ்யூகோ போக், ஹாரி பர்ன்ஸ், மேசன் கிளார்க், ஜேக்கப் கோட்டர், ஆர்யன் மான், பிராண்டன் மாட்ஸோபௌலோஸ், ப்ளின் மோரி, ஸ்னேஹித் ரெட்டி, கேலம் சாம்சன், ஜஸ்கரன் சந்து, செல்வின் சஞ்சய், ஹண்டர் ஷோர், ஹாரி வெய்ட்.

Tags:    

மேலும் செய்திகள்