முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.;

Update:2022-09-05 19:15 IST

கெய்ர்ன்ஸ்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவ்து ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் உள்ள கஸாலி ஸ்டேடியத்தில் நாளை( 06-09-2022) நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அதில் முதல் இரு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 141 ரன்களில் சுருண்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்திய நேரப்படி காலை 9.50 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

இரு அணிகளின் வீரர்கள் விவரம்:

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச்( கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ( விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஸ் கேஷ்லேவுட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஷ், சீன் அப்போட்

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், பின் ஆலென், கேன் வில்லியம்சன் ( கேப்டன் ), டாம் லதாம் ( விக்கெட் கீப்பர் ), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டில் சவுதி, லாக்கி பெர்குசன், ட்ரென்ட் பவுல்ட், டேவான் கான்வே, மேட் ஹென்ட்றி, மிக்கெல் பிரேஸ்வெல், பென் சீயர்ஸ்.

Tags:    

மேலும் செய்திகள்