உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
கிளாசென் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
10 ஓவர்கள் முடிவு
தென் ஆப்பிரிக்கா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. வான் டெர் டஸன் 9 ரன்களுடனும், கிளாசென் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 40 ஓவர்களில் 292 ரன்கள் தேவைப்படுகிறது.
மார்க்ரம் அவுட்:
தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா 11 ரன்னில் அவுட்
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா 11 ரன்னில் அவுட் ஆனார். ஜடேஜா பந்து வீச்சில் பவுமா போல்ட் முறையில் அவுட் ஆனார்.
6 ஓவர்கள் முடிவு
6 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பவுமா 10 ரன்களுடனும், வான் டெர் டஸன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 44 ஓவர்களில் 308 ரன்கள் தேவைப்படுகிறது.
குயின்டன் டி காக் அவுட்
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரரான குயின்டன் டி காக் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். சிராஜ் பந்து வீச்சில் டி காக் போல்ட் முறையில் அவுட் ஆனார்.
1 ஓவர் முடிவு
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள தென் ஆப்பிரிக்கா 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா 326 ரன்கள் குவிப்பு...!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்களுடனும், ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
49 ஓவர்கள்
இந்தியா 49 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்துள்ளது. கோலி 100 ரன்களுடனும், ஜடேஜா 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்
விராட் கோலி சதம் விளாசி அசத்தல்...!
தனது 35-வது பிறந்தநாளான இன்று விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49வது சதத்தை கோலி விளாசினார். இதன் மூலம் சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.