கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளம் இங்கிலாந்து வீரரின் மரணம்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-05-03 15:20 IST

image courtesy: twitter/@WorcsCCC

லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் (வயது 20). சுழற்பந்து வீச்சாளரான இவர் 19 -வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியில் விளையாடியுள்ளார். தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் 20 வயதான ஜோஷ் பேக்கர், அவரது குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார். அவரது நண்பர் தொலைபேசியில் அழைத்தபோது பதில் அளிக்காததால், நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் ஜோஷ் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இவரது இறப்பிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

இளம் வீரரின் மரணம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்