பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து விலகிய பிரேசில்

2023-ல் பெண்களுக்கான கால்பந்து உலகக்கோப்பையை நடத்துவதற்கான போட்டியில் இருந்து பிரேசில் விலகியுள்ளது.

Update: 2020-06-10 08:15 GMT
பிரசில்யா

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி ஒதுக்கீடு செய்வது இயலாத காரியம் என இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக கொலம்பியா அல்லது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து நடத்துவதற்கு பிரேசில் ஆதரவு தெரிவிக்க உள்ளது. உலகக்கோப்பையை நடத்தும் நாடு குறித்து வரும் 25ஆம் தேதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்